Javvarisi Kanji: ஜவ்வரிசியை இதுவரை நாம் பாயாசம் செய்ய மட்டும் தான் பயன்படுத்தியிருப்போம். ஜவ்வரிசியை வைத்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கஞ்சி செய்து கொடுக்கலாம் என்பது ஆச்சரியமாக உள்ளது அல்லவா. ஆனால் உண்மையில் சொல்லப்போனால் குழந்தைகளுக்கான பல்வேறு சத்துக்களை அடக்கிய ஒரு ஆரோக்கியமான கஞ்சி தான் இந்த ஜவ்வரிசி கஞ்சி. இந்த ஜவ்வரிசி கஞ்சியினை குழந்தைகளுக்கு எட்டு மாத காலம் முதல் நாம் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஜவ்வரிசி என்பது மரவள்ளிக்கிழங்கிலிருந்து எடுக்கக்கூடிய ஒரு வகையான ஸ்டார்ச்சிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருளாகும். சபுதானா, சாகோ, சபுடானா என்று பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களுடன் அழைக்கப்படும் இந்த ஜவ்வரிசி ஒரு எளிமையான அதே சமயம் ஆரோக்கியமான உணவு பொருளாகும். இதில் நார் சத்துக்கள் அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாக கூடிய உணவு பொருளாகவும் இருக்கும்.
Javvarisi Kanji
Javvarisi Kanji:
ஜவ்வரிசியின் நன்மைகள்
- ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு தேவையான எனர்ஜியினை உடனடியாக வழங்கக்கூடியது.
- ஜவ்வரிசியை குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்று புண் எனப்படும் அல்சர் ஏற்படாது.
- ஜவ்வரிசி புரத மற்றும் கார்போஹைட்ரேடுகள் அதிகம் என்பதால் குழந்தைகளின் தசைக்கு வலிமை அளிக்கக்கூடியது.
- ஜவ்வரிசியானது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ரத்த சோகை வராமல் தடுக்க கூடியது.
- ஜவ்வரிசியில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
- ஜவ்வரிசியில் கால்சியம் சத்து அதிகம் என்பதால் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலுவலிக்கின்றது. ஜவ்வரிசியை தொடர்ந்து உட்கொள்ளும் பொழுது எலும்பு தேய்மானம் அடையாமல் தடுக்க கூடியது.
- ஜவ்வரிசியில் கொழுப்பு சத்துக்கள் குறைவு என்பதால் இதய குழாய்களில் கொழுப்பு சத்து சேராமல் தடுக்க கூடியது.
- சர்க்கரை நோய்க்கு ஜவ்வரிசி கஞ்சி சிறந்த தீர்வாகும்.
- ஜவ்வரிசி- 1 கப்
- தண்ணீர் – ஒன்றரை கப்
- ஏலக்காய் தூள் -1 சிட்டிகை
Javvarisi Kanji
செய்முறை
1.ஜவ்வரிசியினை நன்கு தண்ணீரில் கழுவி மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
2.கடாயில் ஒன்றை கப் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
3.ஊறவைத்த.ஜவ்வரிசியினை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்றாக கிளறவும்.
4.ஜவ்வரிசி கண்ணாடி பதத்திற்கு வரும் அளவிற்கு இடைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
5.ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
6.குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்றால் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
7.கிண்டும்போது தண்ணீர் குறைவாக உள்ளது என்று நீங்கள் நினைத்தால் சிறிதளவு தண்ணீரும் சேர்த்துக் கொள்ளலாம்.
8.ஜவ்வரிசி நன்றாக வெந்ததும், ஆற வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு முதல் உணவு கொடுக்க ஆரம்பித்த பின்னர், இந்த ஜவ்வரிசி கஞ்சியினை எட்டாவது மாதம் முதல் கொடுக்க ஆரம்பிக்கலாம். ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது சுவைக்காக நாட்டு சக்கரை அல்லது கோகனட் சுகர் சேர்த்து கொடுத்துக் கொள்ளலாம்.
சிறியவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் உண்ணக்கூடிய ஒரு சத்தான கஞ்சி தான் இந்த ஜவ்வரிசி ரெசிபி. மேலும், நார் சத்துக்கள் அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானமாக கூடிய உணவு. எனவே வாரம் இரு முறை ஜவ்வரிசி கஞ்சி கொடுப்பது குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதாகும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு ஜவ்வரிசி கஞ்சி கொடுக்கலாமா?
ஜவ்வரிசி கஞ்சி ஜீரணம் ஆவதற்கு எளிதானது என்பதால் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம்.
ஜவ்வரிசி கஞ்சியினை எத்தனை மாதத்தில் இருந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்?
ஜவ்வரிசி கஞ்சியினை குழந்தைகளுக்கு எட்டாவது மாதத்தில் இருந்து கொடுக்க ஆரம்பிக்கலாம்.
ஜவ்வரிசி கஞ்சியில் உள்ள சத்துக்கள் என்னென்ன?
ஜவ்வரிசி கஞ்சியில் புரதச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு அனைத்து விட்டமின்களும் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். வாரத்திற்கு இரு முறை இந்த ஜவ்வரிசி கஞ்சியினை இடையிடையே உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சத்துக்கள் நிறைந்த ஜவ்வரிசி கஞ்சி
Ingredients
- ஜவ்வரிசி-1 கப்
- தண்ணீர்-ஒன்றரை கப்
- ஏலக்காய்தூள் -1 சிட்டிகை
Notes
- ஜவ்வரிசி நன்கு தண்ணீரில் கழுவி மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
- கடாயில் ஒன்றை கப் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
- ஊறவைத்த ஜவ்வரிசி நெய் கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்றாக கிளறவும்.
- ஜவ்வரிசி கண்ணாடி பதத்திற்கு வரும் அளவிற்கு இடைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
- ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்றால் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
- கிண்டும்போது தண்ணீர் குறைவாக உள்ளது என்று நீங்கள் நினைத்தால் சிறிதளவு தண்ணீரும் சேர்த்துக் கொள்ளலாம்.
- ஜவ்வரிசி நன்றாக வெந்ததும், ஆற வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
Leave a Reply