Aaru Matha Kulanthaikalukkana Kanji: குழந்தைகளுக்கு ஆறுமாத காலமாகிவிட்டால் நன்கு சத்தான,எளிமையான திட உணவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.ஏனென்றால் அதுவரை தாய்ப்பால் மட்டுமே அருந்திய குழந்தைகள் திட உணவினை புதிதாக ருசிக்க ஆரம்பிக்கும் காலமது.நாம் கொடுக்கும் உணவு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவாக இருந்தால் குழந்தைகளுக்கு அஜீரணக்கோளாறுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கலாம்.மேலும் குழந்தைகளுக்கு திட உணவினை ருசிப்பதற்கான ஆர்வத்தை அதிகப்படுத்தும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கடைகளில் விற்கப்படும் ப்ரெசர்வேடிவ்ஸ் கலந்த உணவுகளை காட்டிலும் வீட்டிலேயே தயார் செய்து கொடுக்கும் ஹெல்த் மிக்ஸ் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.ஏற்கனவே தயார் நிலையில் இருப்பதால் நாமும் எளிதாக குழந்தைகளுக்கு சமைத்து கொடுக்கலாம்.அதற்கான ரெசிபிதான் பொரிகடலை அரிசி கஞ்சி.குழந்தைகளுக்கு முதல் முதலாக உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது மூன்றுநாள் விதிமுறையை கடைபிடிப்பது அவசியம்.
என் குழந்தைக்கு எந்த அரிசி கொடுக்கலாம்?
பெரும்பாலான தாய்மார்களின் கேள்வி என் குழந்தைக்கு என்ன அரிசி கொடுக்கலாம் என்பதே.நாம் வீட்டில் வழக்கமாக உபயோகிக்கும் அரிசியே கொடுக்கலாம் என்பதே அதற்கான பதில்.ஏனென்றால் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்பொழுதே நாம் உபயோகிக்கும் அரிசிக்கு பழக்கப்பட்டிருக்கும் என்று கருத்துக்கணிப்பு சொல்கின்றது.நீங்கள் மேலும் ஆரோக்கியமான ஒன்றை கொடுக்க விரும்பினால் பட்டை தீட்டப்படாத கைக்குத்தல் அரிசியை கொடுக்கலாம்.
Aaru Matha Kulanthaikalukkana Kanji :
- கைக்குத்தல் அரிசி – 4 டே.ஸ்பூன்
- பொரிகடலை – 2 டே.ஸ்பூன்
- சுக்குத்தூள் – ½ டீ.ஸ்பூன்
செய்முறை
1.அரிசியை கழுவி நன்றாக வெயிலில் காயவைக்கவும்.
2.காய்ந்த அரிசியை பானில் பொன்னிறமாக உப்பி வரும்வரை மிதமான தீயில் வறுக்கவும்.
3.ஒரு ஓரமாக வைக்கவும்.
4. அதே பானில் பொரிகடலையை பொன்னிறமாகும்வரை அரைக்கவும்
5.மிக்சி ஜாரில் வறுத்த அரிசி,பொரிகடலை மற்றும் சுக்குத்தூள் சேர்த்து அரைக்கவும்.
பொரிகடலை அரிசி கஞ்சி செய்வது எப்படி ?
1.பானை சூடாக்கி அதில் 2 கப் தண்ணீரை எடுத்துக்கொள்ளவும்.
2. 2 டே.ஸ்பூன் கஞ்சிப்பொடியை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
3.மிதமான தீயில் 5-10 நிமிடங்களுக்கு கஞ்சி பதம் வரும் அளவிற்கு கலக்கவும்.
4.இளஞ்சூட்டுடன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
கைக்குத்தல் அரிசியின் நன்மைகள்:
கைக்குத்தல் அரிசிச் சோறு ஒரு முழு தானிய உணவு.இதில் ஏராளமான நன்மைகள் பொதிந்துள்ளன.
- சத்தான வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை உள்ளன.
- நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் மிகுதியாக உள்ளது.
- கைக்குத்தல் அரிசியில் உள்ள நார்சத்துக்கள் உணவினை எளிதாக செரிக்க செய்து மலசிக்கலை தடுக்கின்றது.
- மெக்னீசியம் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றது.
Leave a Reply