Pumpkin in Tamil: குழந்தைகளுக்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே சத்தான உணவுப் பொருட்களை நாம் உண்ண பழக்கப்படுத்தும் பொழுது பிற்காலத்தில் அவர்கள் அந்த உணவினை எந்தவித மறுப்பும் இல்லாமல் சாப்பிடுவதற்காக பழக்கத்தினை ஏற்படுத்தும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பொதுவாக பூசணிக்காயை பெரியவர்களே உண்ண விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் அந்த காயின் சுவை பலருக்கும் பிடிக்காது.
சொல்லப்போனால் இந்த பூசணிக்காயில் தான் குழந்தைகளின் உடம்பிற்கு தேவையான அத்தனை வைட்டமின்களும்,மினரல்களும் ஏன் நோய் எதிர்ப்பு சக்தியும் ஏராளமாக குவிந்துள்ளன.
எனவே அதனை ஆரம்பகட்ட காலத்தில் இருந்தே குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் அதை எப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடுவார்கள் என்ற சந்தேகம் நமக்கு ஏற்படும். அதற்கான பதிலை நாம் இப்போது தெளிவாக காணலாம்.
Pumpkin in Tamil:
yellow pumpkin in tamil:
குழந்தைகளுக்கு பூசணிக்காயை எப்பொழுது கொடுக்க ஆரம்பிக்கலாம்?
பூசணிக்காய் என்பது பல சத்துக்களை உள்ளடக்கிய வரப்பிரசாதம் என்பதால் இதனை குழந்தைகளுக்கு ஆறு மாத கால முடிவில் இருந்து கொடுக்க ஆரம்பிக்கலாம்.
என் மகனுக்கு நான் கீழே குறிப்பிட்டதுபோல பூசணிக்காய் மசியலை 6 மாத காலத்திலிருந்தே கொடுக்க ஆரம்பித்ததால் பூசணிக்காயை விரும்பி சாப்பிடுவான்.நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்.
பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்
pumpkin uses in tamil
• பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடியது.
• குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க கூடியது.
• குடற்புழுவினை அழிக்கும் தன்மை வாய்ந்தது.
• ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
• பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ குழந்தைகளின் பார்வைத் திறனை அதிகரிக்க வல்லது.
குழந்தைகளுக்கான பூசணிக்காயை தேர்ந்தெடுப்பது எப்படி ?
நறுக்கிய பூசணிக்காய் வாங்க வேண்டும் என்றால் நன்றாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கக்கூடிய பூசணிக்காய் வாங்க வேண்டும்.முழு பூசணிக்காயினை வேங்கை வேண்டுமென்றால் அதிகம் பழுத்த பழத்தினை வாங்க கூடாது.
pumpkin recipes in tamil:
தேவையானவை
- பூசணிக்காய் ஒரு துண்டு
- சீரகத்தூள் -இம்மியளவு
Pumpkin in Tamil:
செய்முறை
1.பூசணிக்காயின் நடுவில் உள்ள விதை பகுதியினை நீக்கவும்.
2.தோல் நீக்கி சதை பகுதியினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
3.ஒரு சிறு பாத்திரத்தில் காயினை எடுத்து கொண்டு குக்கர் அல்லது பானில் தண்ணீர் நிரப்பி அதில் காயினை வைத்து ஆவியில் வேகவைக்கவும்.
4.குக்கரில் ஒரு விசில் வைத்து பின்னர் காயினை ஆற விடவும்.
5.பானில் வேகவைத்தால் 10 முதல் 15 நிமிடங்கள் பூசணிக்காயினை நன்றாக வேகவைக்க வேண்டும்.
6.சீரகத்தூள் சேர்த்து நன்றாக மசிக்கவும்.
7.நைசாக வேண்டுமென்றால் மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
8.கெட்டியாக இருந்தால் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்க்கவும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்?
பூசணிக்காய் கொடுப்பது குழந்தைகளுக்கு நன்மை பயக்குமா?
பூசணிக்காயானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது மேலும் வைட்டமின்கள்,இரும்புச்சத்து,பொட்டாசியம் மற்றும் பலசத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.
பூசணிக்காய் குழந்தைகளுக்கு மலச்சிக்கலை உண்டாக்குமா ?
பூசணிக்காயில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்குமே தவிர மலச்சிக்கலை உண்டு பண்ணாது.
குழந்தைகளுக்கு எப்பொழுது பூசணிக்காயை கொடுக்க ஆரம்பிக்கலாம்?
குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிந்தவுடன் பூசணிக்காயை கொடுக்க ஆரம்பிக்கலாம் மேலும் குழந்தைகளுக்கு முதல் உணவாக கொடுப்பதற்கு ஏற்ற தான் இந்த பூசணிக்காய்.
குழந்தைகளுக்கான பூசணிக்காய் மசியல்
Ingredients
- பூசணிக்காய் – 1 துண்டு ·
- சீரகத்தூள்-இம்மியளவு
Notes
- பூசணிக்காயின் நடுவில் உள்ள விதை பகுதியினை நீக்கவும் .
- தோல் நீக்கி சதை பகுதியினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
- ஆவியில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
- ஒரு சிறு பாத்திரத்தில் காயினை எடுத்து கொண்டு குக்கர் அல்லது பானில் தண்ணீர் நிரப்பி அதில் காயினை வைக்கவும்.
- குக்கரில் ஒரு விசில் வைத்து பின்னர் காயினை ஆற விடவும்.
- பானில் வேகவைத்தால் 10 முதல் 15 நிமிடங்கள் பூசணிக்காயினை நன்றாக வேகவைக்க வேண்டும்.
- சீரகத்தூள் சேர்த்து நன்றாக மசிக்கவும்.
- நைசாக வேண்டுமென்றால் மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
- கெட்டியாக இருந்தால் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்க்கவும்.
Leave a Reply