Ragi Kanji: ராகி கஞ்சி என்று அழைக்கப்படும் கேழ்வரகு கஞ்சி மற்றும் கம்பு கஞ்சி போன்றவை நம் முன்னோர்களின் உணவு பட்டியலில் அன்றாடம் இடம்பெற்றவை.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் இன்று நாம் சிறுதானியங்களை முற்றிலும் மறந்துவிட்டோம். மேலும் நம் அடுத்த சந்ததிக்கு இதன் பெயரே சரியாக தெரியாது என்பதே முற்றிலும் உண்மை.
ஆனால் உண்மையில் சொல்லப்போனால் நாம் வழக்கமாக உண்ணும் அரிசி சாதத்தை காட்டிலும் பல மடங்கு சத்துக்களை உள்ளடக்கியது தான் இந்த சிறுதானியங்கள்.
இவற்றை நம் குழந்தைகளின் உணவு பட்டியலில் இடம் பெறச் செய்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என்பது பெற்றோர்களாகிய நமது கடமை.பொதுவாக கம்பு கூழ், ராகி கூழ் போன்றவை கோடைக்காலங்களில் மட்டுமே உண்ணப்படும் உணவு என்று நாம் நினைத்து கொண்டிருக்கின்றோம்.
ஆனால் அதனை எளிதில் ஜீரணம் ஆகும் பொருட்களுடன் சேர்த்து இதமாக குளிர்காலத்திலும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அவற்றை குழந்தைகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு கொடுக்கலாம் என்பதை பார்ப்போம்.
Ragi Kanji:
Ragi Kanji:
கேழ்வரகின் நன்மைகள்:
- கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம்,புரதம், நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளன.
- மேலும் வெந்தயம் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுவடையச் செய்கின்றது.
- கேழ்வரகில் புரதச் சத்து நிறைந்துள்ளதால் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க கூடியது.
- கேழ்வரகில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க கூடியது.
- இதில் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இரத்த சோகை வராமல் தடுக்கக்கூடியது.
- குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியை அளிக்கக்கூடியது.
- உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கூடியது.
- கேழ்வரகில் உள்ள வேதிப் பொருட்கள் தோலில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடியது.
Ragi Kanji:
- ராகி- கால் கப்
- தண்ணீர் 2 கப்
- சீரகத்தூள்- இம்மியளவு
- மிளகுத்தூள்- இம்மியளவு
- பெருங்காயதூள்- இம்மியளவு
- வெங்காயம் -1/2 நன்கு நறுக்கியது (தேவைப்பட்டால்)
- உப்பு – தேவையான அளவு
Ragi Kanji:
செய்முறை
1.ஒரு பானில் ராகி மாவுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
2. 5 முதல் 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும். பின்பு ஆற விடவும்.
3.மிளகுத்தூள், சீரகத்தூள் பெருங்காயத்தூள்,நறுக்கிய வெங்காயம் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
4.குழந்தைகளுக்கு நறுக்கிய வெங்காயம் பச்சையாக சேர்ப்பது பிடிக்கவில்லை என்றால் நீங்கள் நன்கு வதக்கி அதனுடன் சேர்க்கலாம். குழந்தைகளுக்கு பரிமாறவும்.
5.ஐந்து வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அவர்கள் விருப்பப்பட்டால் மோர் கலந்து கொடுக்கலாம்.
6.குழந்தைகளுக்கு இன்னும் ஆரோக்கியமாக கொடுக்க விரும்பினால் அவர்களுக்கு பிடித்த காய்கறிகளை வதக்கி இதனுடன் சேர்த்துக் கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
குழந்தைகளுக்கு ராகியினை தினமும் கொடுக்கலாமா?
கேழ்வரகில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து இருப்பதால் குழந்தைகளுக்கு தினமும் உணவில் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆறு மாத குழந்தைகளுக்கு முதன்முதலில் கொடுப்பது எப்படி?
குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிவடைந்தவுடன் பொதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கு முதன்முதலாக கொடுக்கும்போது ராகி பாலினை கொடுக்க ஆரம்பிக்கலாம். அதன்பின்னர் ராகி மாவு கஞ்சி செய்து கொடுக்கலாம். ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு ராகி தோசை போன்ற விதவிதமான உணவுகளை செய்து கொடுக்கலாம்.
ராகி சாப்பிட்டால் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்குமா ?
குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்திருப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியமான எடை வளர்ச்சிக்கு இது உதவுகின்றது.
ராகி சாப்பிட்டால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுமா?
ராகி செரிமானம் ஆவதற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படுவதால் சில குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படலாம். அதற்கு நீங்கள் குழந்தைகள் உண்ணும் போது இடையிடையே சிறிது சிறிது தண்ணீர் குடிக்க வைக்கலாம். பொதுவாக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிப்பதற்கு தண்ணீரும் சற்று அதிகமாக தேவைப்படும்.இதுவே காரணமாகும்.
குழந்தைகளுக்கு குளிர் காலத்தில் கேழ்வரகை கொடுக்கலாமா?
தாராளமாக கொடுக்கலாம். குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் என்று நினைத்தால் மோர் போன்றவை சேர்க்காமல் மேலே சொன்னபடி நீங்கள் செய்து இதமாக பரிமாறலாம்.
குழந்தைகளுக்கு ராகி இரவில் கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு முதன்முதலில் கொடுக்க ஆரம்பிக்கும் போது காலை மற்றும் பகல் நேரத்தில் கொடுப்பதே சிறந்தது.குழந்தைகள் உணவினை நன்கு உண்டு செரிமானம் ஆக ஆரம்பித்து விட்டால் நீங்கள் இரவிலும் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கான ராகி கஞ்சி
Ingredients
- · ராகி-கால் கப்
- · தண்ணீர்2 கப்
- · சீரகத்தூள்-இம்மியளவு
- · மிளகுத்தூள்-இம்மியளவு
- · பெருங்காயதூள்-இம்மியளவு
- · வெங்காயம்-1/2 நன்கு நறுக்கியது (தேவைப்பட்டால்)
- · உப்பு- தேவையான அளவு
Notes
- ஒரு பானில் ராகி மாவுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
- 5 முதல் 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும். பின்பு ஆற விடவும்.
- மிளகுத்தூள், சீரகத்தூள் பெருங்காயத்தூள்,நறுக்கிய வெங்காயம் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- குழந்தைகளுக்கு நறுக்கிய வெங்காயம் பச்சையாக சேர்ப்பது பிடிக்கவில்லை என்றால் நீங்கள் நன்கு வதக்கி அதனுடன் சேர்க்கலாம். குழந்தைகளுக்கு பரிமாறவும்.
- ஐந்து வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அவர்கள் விருப்பப்பட்டால் மோர் கலந்து கொடுக்கலாம்.
- குழந்தைகளுக்கு இன்னும் ஆரோக்கியமாக கொடுக்க விரும்பினால் அவர்களுக்கு பிடித்த காய்கறிகளை வதக்கி இதனுடன் சேர்த்துக் கொடுக்கலாம்.
Leave a Reply