ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Sarkkaraivalli kilandu for babies in Tamil:குழந்தைகளுக்கு ஆறு மாத காலத்திற்கு பின் கொடுக்கப்பட வேண்டிய பல்வேறு வகையான காய்கறி வகைகள்,பழவகைகள் போன்றவற்றை நாம் இதற்கு முன்பு பார்த்துவிட்டோம். அவற்றில் உருளைக்கிழங்கு மசியலும் அடக்கம்.
ஆனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கொடுக்கலாமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும்.மேலும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது என்று சொல்லும் பெரியோர்களும் உண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் நம் குழந்தைகளின் உடம்புக்கு ஏற்றுக்கொண்டால் சர்க்கரைவள்ளிக்கிழங்கு தாராளமாக கொடுக்கலாம்.
குழந்தைகளின் ஆறு மாத காலத்திற்கு பின்பு முதல் உணவாக சர்க்கரைவள்ளி கிழங்கு கொடுக்கலாம். குழந்தைகளுக்கு முதலில் ஒரு ஸ்பூன் அளவு கொடுத்து எவ்வித உடல் உபாதைகளும் இல்லை என்றால் நீங்கள் தாராளமாக வாரம் ஒருமுறை கொடுக்கலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.எனவே, இது குழந்தைகளுக்கு சிறந்த முதல் உணவாக அமைகின்றது.மேலும் இதில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை நிறைந்துள்ளன.
மேலும் இதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் இரும்புச்சத்து போன்றவை குழந்தைகளின் உடலில் ஆற்றலை சேமித்து சிறிது சிறிதாக வெளியேற்றுவதால் குழந்தைகள் உற்சாகமாக விளையாடுவதற்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றது.
இப்பொழுது சர்க்கரை வள்ளிக்கிழங்கு மசியலை குழந்தைகளுக்கு வயிறு உபாதை இல்லாமல் எப்படி கொடுக்கலாம் என பார்க்கலாம்.
Sarkkaraivalli kilandu for babies in Tamil:
தேவையானவை
- சர்க்கரைவள்ளிக் கிழங்கு
- இலவங்கப்பட்டை தூள் இம்மியளவு
இதையும் படிங்க: இன்ஸ்டன்ட் நிலக்கடலை அவல் கஞ்சி
குழந்தைகளுக்கான சர்க்கரைவள்ளிக் கிழங்கு மசியல்
செய்முறை
1.சர்க்கரைவள்ளிக் கிழங்கை 4 துண்டுகளாக வெட்டவும்.
2. 2 முதல் 3 விசில் வரும் அளவிற்கு ஆவியில் வேக வைக்கவும்.
3.நன்றாக ஆறவிடவும்.
4.தோலினை உரிக்கவும்.
5.நன்றாக மசிக்கவும்.
6.லவங்க பட்டை தூள் சேர்த்து கலக்கவும்.
7.குழந்தைகளுக்கு பரிமாறவும்.
ஆறு மாத காலத்திற்கு பின்பு குழந்தைகளுக்கு என்னென்ன மசாலாக்கள் கொடுக்கலாம் என்பதை நன்கு தெரிந்து கொண்டு பின்பு படிப்படியாக ஒவ்வொரு மசாலாப் பொருட்களை சேர்க்கலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கினை இகடைகளில் வாங்கும் பொழுது கருப்பு புள்ளிகள் மற்றும் பிளவுகள் இல்லாதவற்றை வாங்க வேண்டும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான சர்க்கரைவள்ளிக் கிழங்கு மசியல்
Ingredients
- 1 சர்க்கரைவள்ளிக்கிழங்கு
- இம்மியளவு இலவங்கப்பட்டை தூள்
Instructions
- சர்க்கரைவள்ளிக்கிழங்கை 4 துண்டுகளாக வெட்டவும்.
- 2 முதல்3 விசில் வரும் அளவிற்கு ஆவியில் வேக வைக்கவும்.
- நன்றாக ஆறவிடவும்.
- தோலினைஉரிக்கவும்.
- நன்றாக மசிக்கவும்.
- லவங்கபட்டை தூள் சேர்த்து கலக்கவும்.
- குழந்தைகளுக்குபரிமாறவும்.
Leave a Reply