Dry Fruits Barbi: குழந்தைகளுக்கு இப்பொழுது எல்லாம் பாக்கெட்டிகளில் அடைத்து வரும் உணவுகளை கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலேயே செய்யப்படும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களை கொடுப்பதுதான் சிறந்தது என்ற விழிப்புணர்வு எல்லா அம்மாக்களிடமும் இருந்து வருகின்றது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பெரும்பாலான பள்ளிகளிலும் கூட ஜங்க் ஃபுட் கொடுப்பதை காட்டிலும் கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், டிரை ஃப்ரூட்ஸ் போன்ற ஆரோக்கியமான உணவு வகைகளை ஸ்நாக்ஸ்களாக கொண்டு வர வேண்டும் என்கின்ற விழிப்புணர்வு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆனால் ஒரே வகையான கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் போன்றவற்றை கொடுத்தால் நம் குட்டிகளுக்கு போர் அடித்து விடும் அல்லவா? அதே சமயம் சில குழந்தைகள் டிரை ஃப்ரூட்ஸ் அப்படியே சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கான ரெசிபி தான் இந்த டிரை ஃப்ரூட்ஸ் பர்பி.
இதில் பாதாம், முந்திரி, வால்நட், பேரிச்சை, ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்துள்ளதால் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஸ்நாக்ஸ் ஆக இது இருக்கும்.
Dry Fruits Barbi
இதன் செய்முறையை பார்ப்பதற்கு முன்னால் இதில் அடங்கியுள்ள நன்மைகளை பார்க்கலாம்:
Dry Fruits Barbi:

- இவற்றில் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
- உலர் பழங்களில் இயற்கையான நல்ல கொழுப்பு சத்துக்கள் அதிகம் உள்ளதால் குழந்தைகளை நினைவாற்றல் மற்றும் ஒருமுகப்படுத்தும் தன்மையை அதிகரிக்க வல்லது.
- நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கின்றது.
- இதில் இயற்கையாகவே நிறைந்துள்ள இனிப்புச் சத்து குழந்தைகள் நீண்ட நேரம் விளையாடுவதற்கு தேவையான ஆற்றலை தருகின்றது.
- மேலும் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க உலர் பழங்கள் உதவுகின்றன.
- இவற்றில் நிறைந்துள்ள கால்சியம் மெக்னீசியம் மினரல்ஸ் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக்க உதவுகின்றன.
- ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க உலர் பழங்களில் உள்ள இரும்பு சத்துக்கள் உதவுகின்றன.
கொட்டை நீக்கிய பேரிச்சை- 1 கப்
பாதாம் – கால் கப்
முந்திரி – கால் கப்
வால்நட் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள்- 1 சிட்டிகை
நெய் -1 டீ .ஸ்பூன்
செய்முறை
- பாதாம், முந்திரி மற்றும் வால்நட் போன்றவற்றை இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு மிதமான தீயில் வறுக்கவும்.
நன்கு ஆறவிடவும். - மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்று இரண்டாக அரைக்கவும். ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
- தேவைப்பட்டால் சிறிதளவு நெய் சேர்த்து நன்கு பிசைந்து தட்டில் பரப்பி தேவையான வடிவத்திற்கு நறுக்கிக் கொள்ளவும்.
- பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுப்பதற்கும், குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்புவதற்கும் ஏற்ற நல்ல ஸ்னாக்ஸாக இது இருக்கும்.
- வாரம் ஒரு முறை செய்து டப்பாவில் வைத்துக் கொண்டால் குழந்தைகளுக்கு விருப்பப்பட்ட போது எடுத்து நாம் சிற்றுண்டியாக கொடுக்கலாம்.

உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு இந்த பர்பியை கொடுக்கலாமா?
பொதுவாகவே நட்ஸ் வகைகளை ஒரு வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்காமல் இருப்பதே சிறந்தது. கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் பவுடராக செய்து கஞ்சியுடன் கலந்து கொடுக்கலாம்.
பேரிச்சை சேர்க்காமல் கொடுக்கலாமா?
பேரீச்சை சேர்க்கும் பொழுது இயற்கையான இனிப்பு சுவையை கொடுப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள் அது மட்டுமல்லாமல் பிசைந்து விருப்பமான வடிவத்திற்கு நறுக்கிக் கொள்ள பேரிச்சை உதவும்.
வேறு ஏதேனும் விதைகளை சேர்த்துக் கொள்ளலாமா?
இதனுடன் வருத்த ஏழு விதைகள் மற்றும் ஆலிவிதைகள் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
டிரை ஃப்ரூட்ஸ் பர்பி
Ingredients
- கொட்டை நீக்கிய பேரிச்சை- ஒரு கப்
- பாதாம்- கால் கப்
- முந்திரி- கால் கப்
- வால்நட் -2 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- 1 சிட்டிகை
- நெய் -1 டீ.ஸ்பூன்









Leave a Reply