Cabbage Rice for Babies in Tamil : வைட்டமின்கள்,மினரல்ஸ்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஹெல்தியான சாதம் தான் இந்த முட்டைக்கோஸ் சாதம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நாம் வழக்கமாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பருப்பு சாதம், கீரை சாதம் சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றிலிருந்து சற்றே வேறுபட்ட ரெசிபி தான் இந்த முட்டைகோஸ் சாதம்.
முட்டைக்கோஸ் மற்றும் அரிசி ஆகியவை சரிவிகிதத்தில் கலந்து இருப்பதால் குழந்தைகளுக்கு எனர்ஜி அளிக்கும் ஒரு சூப்பரான சாதம் தான் இந்த முட்டைகோஸ் சாதம்.
- பொதுவாகவே பச்சை நிறத்தில் உள்ள காய்கறிகள் அனைத்தும் ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியவை. அந்த வகையில் பார்த்தால் முட்டைக்கோஸில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
- மேலும் பயோ நியூட்ரியன்ஸ்கள் இதில் அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
- நார் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கக் கூடியது.
- சரும ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கக் கூடியது.
- புற்றுநோய் வராமல் தடுக்கக் கூடியது.
- வயிற்றில் அல்சர் ஏற்படாமல் தடுக்கக் கூடியது.
- முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தக்கூடியது.
- இதில் அமைந்துள்ள அமினோ ஆசிட் உடல் காயங்களை சரிப்படுத்த கூடியது.
- இதில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகமாக இருப்பதால் சருமத்தினை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.
- இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டின் எனப்படும் சத்தானது கண்களுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடியது.

Cabbage Rice for Babies in Tamil
தேவையானவை
- அரிசி -2 டேபிள் ஸ்பூன்
- முட்டைகோஸ் -2 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம்- 1 டேபிள் ஸ்பூன்
- பூண்டு -1 பல்
- சீரகத்தூள் -1 டீ.ஸ்பூன்
- நெய்- 2 டீ.ஸ்பூன்
Cabbage Rice for Babies in Tamil:
Cabbage Rice for Babies in Tamil:
Cabbage Rice for Babies in Tamil:
செய்முறை
1.குக்கரில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
2.நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
3. முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும்.
4.சீரகத்தூள் சேர்க்கவும்.
5.அரிசி மற்றும் தேவையானளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 முதல் 3 விசில் வரும் அளவிற்கு சூடாக்கவும.
6.நன்றாக மசித்து குழந்தைகளுக்கு பரிமாறவும்.
குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் சாதத்திலிருந்து வேறுபட்டு வித்தியாசமான சுவையுடன் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பர். மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க கூடியது.
எட்டு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த சாதத்தினை கொடுக்கலாம்.மேலும் இதில் சீரகம் மற்றும் பூண்டு சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானமாவதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியினையும் அதிகரிக்க வல்லது.
Cabbage Rice for Babies in Tamil:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
முட்டைக்கோஸ் சாதத்தினை குழந்தைகளுக்கு எப்பொழுது கொடுக்க ஆரம்பிக்கலாம்?
எட்டு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த சாதத்தினை தாராளமாக கொடுக்கலாம்.
முட்டைக்கோஸ் சாதம் குழந்தைகளுக்கு செரிமானம் ஆகுமா?
பொதுவாகவே முட்டைக்கோஸ் மலச்சிக்கலை தவிர்க்கக் கூடியது. மேலும் இதில் சீரகம் மற்றும் பூண்டு சேர்த்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க வல்லது.
முட்டைக்கோஸில் உள்ள நன்மைகள் என்னென்ன?
முட்டைக்கோஸ் சாதத்தில் வைட்டமின் ஏ, சி ,கே ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால் கண்களுக்கு நன்மை அளிக்கக் கூடியது.
குழந்தைகளுக்கான முட்டைக்கோஸ் சாதம்
Ingredients
- 2 டேபிள் ஸ்பூன் அரிசி
- 2 டேபிள் ஸ்பூன் முட்டைகோஸ்
- 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம்
- 1 பல் பூண்டு
- 1 டீ.ஸ்பூன் சீரகத்தூள்
- 2 டீ.ஸ்பூன் நெய்
Notes
- குக்கரில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
- நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும்.
- சீரகத்தூள் சேர்க்கவும்.
- அரிசி மற்றும் தேவையானளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 முதல் 3 விசில் வரும் அளவிற்கு சூடாக்கவும்.
- நன்றாக மசித்து குழந்தைகளுக்கு பரிமாறவும்.
Leave a Reply