Dry Fruit Choco Burfi: குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்பது உண்மையிலே அம்மாக்களுக்கு சவாலான விஷயம் தான். ஏனெனில், இப்பொழுதெல்லாம் குழந்தைகளுக்கு எவை ஆரோக்கியமற்றதோ அவற்றின் மீது தான் நாட்டம் செல்கின்றது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கடைகளில் விற்கப்படும் கலர் கலரான காற்று அடிக்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட்களும், சாக்லேட்களும் தான் குழந்தைகளின் விருப்பமான தேர்வாக உள்ளது.
அவற்றில் நாட்டமுள்ள குழந்தைகளை ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களான கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்றவற்றின் நன்மைகளைச் சொல்லி விளங்க வைத்து அவற்றின் பக்கம் இழுப்பது அம்மாக்களுக்கு சற்று கடினமான விஷயமாக தான் உள்ளது.
அதனால்தான் எந்தவிதமான ஆரோக்கியமான ரெசிபியாக இருந்தாலும் அதனை குழந்தைகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு செய்து கொடுப்பது என்பதிலேயே நான் கவனம் செலுத்தி குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபிகளை கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி குழந்தைகளுக்கான ஆரோக்கியமான டிரை ப்ரூட்ஸ் சாக்கோ பர்பி. குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அளிக்கும் நட்ஸ்களான முந்திரி, பாதாம் போன்றவை மட்டுமல்லாமல் பேரிச்சம்பழம் சேர்த்துள்ளதால் உடல் நலனுக்கு ஏற்றது.
அது மட்டுமல்லாமல், சாக்கோ பவுடரும் சேர்த்துள்ளதால், இந்த பர்பியானது குழந்தைகள் விரும்பி உண்ணும் ஆரோக்கியமான உணவு பட்டியலில் சேரும் என்பதில் ஐயமில்லை.
Dry Fruit Choco Burfi:
இவ்வளவு சேர்த்துள்ளதால் இதை செய்வது மிகவும் கடினம் என்று எண்ண வேண்டாம். வீட்டில் சமையல் செய்வது போன்று எளிதாக செய்து விடலாம். இதனை செய்வதற்கு முன்னால் இதில் அடங்கியுள்ள நன்மைகளை பார்க்கலாம்.
- பாதாம், முந்திரி போன்றவற்றில் வைட்டமின் இ, கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு சத்து போன்றவை நிறைந்துள்ளன.
- இது நிறைந்துள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
- உலர் பழங்களில் நிறைந்துள்ள ஒமேகா த்ரீ மற்றும் சத்தான கொழுப்புகள் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன.
- அத்திப்பழம், உலர் திராட்சை மற்றும் பேரிச்சம் பழத்தில் நிறைந்துள்ள நார் சத்துக்கள் உணவினில் எளிதில் செரிமானமாக செய்து மலச்சிக்கலை தடுக்க வல்லது.
- உலர் பழங்களில் உள்ள இயற்கையான சக்கரை ஆனது உடலுக்கு தேவையான எனர்ஜியை தரவல்லது.
- டிரை ஃப்ரூட்ஸ் பேரிச்சம்பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் போன்றவை ஆரோக்கியமான சருமத்திற்கும், கூந்தலுக்கும் வழிவகை செய்கின்றது.
Dry Fruit Choco Burfi:
- பேரிச்சை- 20-25
- முந்திரி
- பாதாம்- 10-15
- கோக்கோ பவுடர்- 2 டீஸ்பூன்
- நெய்- தேவையான அளவு
Dry Fruit Choco Burfi:
செய்முறை
- மிக்ஸி ஜாரில் பேரிச்சை முந்திரி பாதாம் மற்றும் கோக்கோ பவுடர் சேர்த்து அரைக்கவும்.
- இந்த கலவையை ஒரு பவுலில் போடவும்.
- கையில் நெய்யினை தடவிக் கொண்டு எலுமிச்சை அளவிற்கு உருண்டை பிடிக்கவும்.
- தட்டையாக தட்டி நடுவில் முந்திரிப் பருப்பு வைத்து அலங்கரிக்கவும்.
- குழந்தைகளுக்கான ஆரோக்கியமான நட்ஸ் பர்பி ரெடி.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Dry Fruit Choco Burfi
Dry Fruit Choco Burfi:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எப்பொழுது உலர் பழங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம்?
குழந்தைகளுக்கு 8-10 மாதங்களுக்குள் உலர் பழங்களை அறிமுகப்படுத்தலாம். சற்று வளர்ந்த குழந்தைகளுக்கு, மென்று சாப்பிடும்படி கொடுக்கலாம்.
உலர் பழங்களை குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு தினமும் டிரை ஃப்ரூட்ஸ் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு உலர் பழங்களை எவ்வாறு கொடுப்பது?
டிரை ஃப்ரூட்ஸ் எனப்படும் உலர் பழங்களை பொடியாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுடன் சேர்த்து கொடுக்கலாம்.
ட்ரை ஃப்ரூட்ஸ் சாக்கோ பர்பி
Ingredients
- பேரிச்சை- 20-25
- முந்திரி
- பாதாம்- 10-15
- கோக்கோ பவுடர்- 2 டீஸ்பூன்
- நெய்- தேவையான அளவு
Leave a Reply