oats kanji recipe: குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிவடைந்த உடன் நன்கு ஆரோக்கியமான உணவினை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு அம்மாவின் விருப்பமாகும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு ஒவ்வொரு வாரமும் கொடுக்க வேண்டிய உணவினை குறித்த தெளிவான அட்டவணைகளை நாம் ஏற்கனவே பார்த்திருப்போம்.
குழந்தைகளுக்கு பொதுவாக காய்கறி கூழ், பழக்கூழ் மற்றும் எளிதான அரிசி கஞ்சி போன்ற பல வகையான கஞ்சி வகைகளை நாம் இதற்கு முன் பார்த்திருப்போம்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் ஒரு எளிதான மற்றும் ஆரோக்கியமான ரெசிபி தான் இந்த ஓட்ஸ் மசியல். மேலும் குழந்தைகளுக்கு முதன்முதலாக உணவினை கொடுக்கும் பொழுது இந்த வகையான கஞ்சி வகைகளை கொடுத்தால் குழந்தைகளுக்கு செரிமானம் ஆவதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.
குழந்தைகளுக்கு சத்தான காலை உணவாக இந்த ஓட்ஸ் கஞ்சியினை நீங்கள் கொடுக்கலாம். மேலும் குழந்தைகளுக்கு உணவில் மேலும் ஆரோக்கியத்தையும் சுவையையும் கூட்ட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இதனுடன் பழங்களையும் கூழாக்கி சேர்த்து கொடுக்கலாம்.
oats kanji recipe:
குழந்தைகளுக்கு ஓட்ஸ் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்:
- ஓட்ஸ்-ல் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் பி ஆகியவை நிறைந்துள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய சத்தான உணவாகும்.
- ஓட்ஸ் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆவதற்கு உதவுகின்றது.
- நார் சத்துக்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாது.
- இதில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளதால் இதிலிருந்து வெளிப்படும் சக்தியானது குழந்தைகள் நாள் முழுவதும் விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியனை அளிக்கவல்லது.
- இதில் பீட்டா குளுக்கோன் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க வல்லது. நோய்க்கிருமிகளுடன் எதிர்த்து போராட உதவுகின்றது.
- பசையம் எனப்படும் குளூட்டன் ஃப்ரீ உணவு என்பதால் கோதுமைக்கு மாறாக ஓட்சிணை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- மொத்தத்தில் ஆறு மாத கால முதல் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய ஒரு அருமையான உணவு தான் ஓட்ஸ் கஞ்சி.
oats kanji recipe:
- மை லிட்டில் மொப்பட் ரோல்டு ஓட்ஸ்– 1 கப் அல்லது உங்கள் வீட்டில் உள்ள ஓட்ஸ்.
- தண்ணீர் -தேவையான அளவு.
மை லிட்டில் மொப்பட்டின் ரோல்டு ஓட்ஸ் ஆனது இயற்கையான ஓட்ஸ் இன் மூலம் பிரசர்வேட்டிவ்ஸ் எதுவும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டதாகும். எனவே ஆறு மாத காலம் முதல் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய பாதுகாப்பான உணவாகும். இதனை நீங்கள் 8220313666 என்ற நம்பரின் மூலம் ஆர்டர் செய்யலாம்.
oats kanji recipe:
செய்முறை
1.ஒரு பானில் ஓட்ஸ் பவுடர் சேர்த்து லேசாக வறுக்கவும்.
2.அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கரைக்கவும்.
3.ஓட்ஸ் நன்கு வந்ததும் ஸ்டவ்வினை ஆஃப் செய்யவும்.
4.குழந்தைகளுக்கான எளிமையான மற்றும் ஆரோக்கியமான ஓட்ஸ் கஞ்சி ரெடி.
குறிப்பு: எட்டு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மசித்த வாழைப்பழம் மற்றும் மேலும் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த மசித்த பழங்களை சேர்த்து கொடுக்கலாம்.
5.எட்டு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு டிரை ஃப்ரூட்ஸ் பவுடர் மற்றும் டேட்ஸ் பவுடர் போன்றவை சேர்த்தும் கொடுக்கலாம்.
6.ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பால், தேன் மற்றும் வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு ருசியாக செய்து கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை அறிய 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
oats kanji recipe:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1.குழந்தைகளுக்கு ஓட்ஸ் எப்பொழுது கொடுக்க ஆரம்பிக்கலாம்?
குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிவடைந்த உடன் நீங்கள் திட உணவு கொடுக்க ஆரம்பித்திருந்தால் தாராளமாக ஓட்ஸ் கஞ்சியையும் கொடுக்கலாம்.
2.குழந்தைகளுக்கு இன்ஸ்டன்ட் ஓட்ஸ் கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு முதல் முதலாக கொடுக்கும் பொழுது இன்ஸ்டன்ட் ஓட்ஸ் கொடுப்பது நல்லதல்ல.ஏனென்றால் அது ப்ராசஸ் செய்யப்பட்டு சர்க்கரை மற்றும் ரிசர்வேட்டிவ்ஸ் போன்றவை சேர்க்க வாய்ப்புள்ளதால் குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக ரோல்டு ஓட்ஸ் மற்றும் ஸ்டீல் கட் ஓட் என்று கடைகளில் கேட்டு அதை குழந்தைகளுக்கு கொடுங்கள்.
3.ஓட்ஸ் கஞ்சியில் சர்க்கரை சேர்க்கலாமா?
குழந்தைகளுக்கு ஒரு வயது வரை உப்பு மற்றும் சர்க்கரையை சேர்க்கக்கூடாது என்பதால் எதுவும் சேர்க்காமல் அப்படியே கொடுப்பதே சிறந்தது நீங்கள் மேலும் சுவையை கூட்ட வேண்டும் என்று நினைத்தால் பழங்களை மசித்து அதில் சேர்த்து கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கான ஓட்ஸ் கஞ்சி
Ingredients
- மைலிட்டில் மொப்பட் ரோல்டு ஓட்ஸ்- 1 கப் அல்லது உங்கள் வீட்டில் உள்ள ஓட்ஸ் ·
- தண்ணீர்-தேவையான அளவு.
Notes
- ஒரு பானில் ஓட்ஸ் பவுடர் சேர்த்து லேசாக வறுக்கவும்.
- அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கரைக்கவும்.
- ஓட்ஸ் நன்கு வந்ததும் ஸ்டவ்வினை ஆஃப் செய்யவும்.
- குழந்தைகளுக்கான எளிமையான மற்றும் ஆரோக்கியமான ஓட்ஸ் கஞ்சி ரெடி.
- குறிப்பு: எட்டு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மசித்த வாழைப்பழம் மற்றும் மேலும் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த பழங்களை சேர்த்து கொடுக்கலாம்.
- எட்டு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு டிரை ஃப்ரூட்ஸ் பவுடர் மற்றும் டேட்ஸ் பவுடர் போன்றவை சேர்த்தும் கொடுக்கலாம்.
- ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பால், தேன் மற்றும் வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு ருசியாக செய்து கொடுக்கலாம்.
Leave a Reply