Javvarisi Idli : குழந்தைகளுக்கு பெரும்பாலும் இட்லி என்றாலே பிடிக்காது. காலையில் இட்லி என்று சொன்னாலே குழந்தைகளின் முகம் சுருங்கி போகும். ஆனால் நீங்கள் இட்லியை தினமும் செய்யும் அதே சுவையில் செய்து கொடுப்பதை காட்டிலும் வித்தியாசமாக குழந்தைகளுக்கு பிடித்தவாறு செய்து கொடுத்தால் கண்டிப்பாக குழந்தைகள் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் விட்டுக் கொடுக்காமல் அதே நேரம் சுவையையும் விட்டுக் கொடுக்காமல் ஆரோக்கியமாக கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த ஜவ்வரிசி இட்லியை…Read More
ஸ்வீட் பனானா தோசை
Banana Wheat Dosa: குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக சாப்பிட காலை உணவாக என்னென்ன கொடுக்கலாம் என்ற அம்மாக்களின் கேள்விகளுக்கு இணங்க விதவிதமான காலை உணவுகளை நாம் இதுவரை பார்த்திருப்போம். இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி ஆனது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதாக செய்யக்கூடிய எளிதான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பழ கோதுமை தோசை. கோதுமை தோசை சாப்பிடும் பழக்கம் இன்று அனைவரிடமும் வெகுவாக குறைந்து வருகின்றது. கோதுமை தோசை ஆனது சாப்பிடுவதற்கு அரிசி மாவு தோசை போன்ற அல்லாமல்…Read More
தேங்காய்பால் சாதம்
Thengai Paal Sadam : குழந்தைகளுக்கு நீங்கள் வழக்கமாக கொடுக்கும் சாத வகைகள் கொஞ்சம் போர் அடித்து விட்டால் இந்த தேங்காய் சாதத்தை கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகளுக்கு இப்பொழுதெல்லாம் சாதம், குழம்பு மற்றும் பொரியல் ஆகியவற்றை வைத்து சாப்பிடுவதை காட்டிலும், எளிதாக சாத வகைகள் தான் விரும்புகின்றனர். ஆனால், குழம்பு மற்றும் பொரியல் வைக்கும் பொழுது காய்கறிகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு கிடைக்கும். ஆனால் நான் தயிர் சாதம், லெமன் சாதம் போன்ற…Read More
குழந்தைகளுக்கான ஆரோக்கியமான அவல் சப்பாத்தி
Aval Chapathi: வழக்கமாக வீட்டில் செய்யப்படும் இட்லி, தோசை, சப்பாத்தி ,பூரி ஆகியவற்றை சாப்பிட்டு போர் அடித்த குழந்தைகளுக்கு சற்று புத்துணர்ச்சி ஊட்ட ஏதேனும் வித்தியாசமான ரெசிபி செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அவல் சப்பாத்தியை நீங்கள் செய்து கொடுக்கலாம். இதுவரை விதவிதமான சப்பாத்தி ரெசிபிகளை நாம் பார்த்திருந்தாலும் இந்த அவல் சப்பாத்தி சற்றே வித்தியாசமான ஒன்றாகும். பொதுவாக நாம் அவலினை ஊற வைத்து அதில் சர்க்கரை, தேங்காய் பூ துருவி சாப்பிடுவதுண்டு. ஆனால் அதை…Read More
முளைகட்டிய சத்துமாவு பீட்ரூட் சப்பாத்தி
Sathumaavu Beetroot chapathi: குழந்தைகளுக்கு நாம் அன்றாட காலை உணவாக இட்லி,தோசை, சப்பாத்தி, பூரி போன்றவற்றை கொடுப்பது வழக்கம். இப்படி நாம் கொடுக்கும் எல்லா உணவுகளிலும் கார்போஹைட்ரேட்டுகள் தான் நிறைந்திருக்கும். அதுமட்டுமல்லாமல், எல்லாவற்றையும் சாப்பிட்டு சாப்பிட்டு குழந்தைகளுக்கு சலிப்பு ஏற்படுவதால் உணவின் மீதும் நாட்டம் குறைந்து விடும். குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் உணவானது எல்லா ஊட்டச்சத்துக்களும் கலந்ததாக இருக்க வேண்டும். அதேநேரம் குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது சுவை மாறாமல் அவர்களுக்கு பிடித்த வண்ணம் இருக்க வேண்டும். அதற்காக தான்…Read More
ஹெல்தியான புரோட்டின் ஸ்மூத்தி
Protein Smoothie in Tamil: வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். உடலின் தசைகள், எலும்புகள், தலைமுடி போன்ற எல்லாவற்றுக்கும் புரதச்சத்து எனப்படும் புரோட்டீனின் பங்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். எனவேதான் புரதச்சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய சத்துமாவினை குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுதே கொடுப்பதற்கு நான் பரிந்துரை செய்கின்றேன். உடல் உறுப்புகளில் உள்ள செல்களின் ஒவ்வொரு மூலக்கூறுகளின் வளர்ச்சிக்கும் புரதம் என்பது மிகவும் அவசியமாகின்றது. புரதம் பொதுவாக பருப்பில் உள்ளது என்று…Read More
கம்பு கீரை காய்கறி இட்லி
Kambu Idli in Tamil: ஆடம்பரமான நாகரீக உணவுகளின் மேல் நாட்டம் செலுத்திய காலம் மலையேறி, நம் பாரம்பரிய உணவுகள் தான் ஆரோக்கியத்திற்கு உகந்தது என்பதை இன்றைய தலைமுறை அம்மாக்கள் உணர ஆரம்பித்து விட்டனர். இதற்கு சாட்சி நமது பாரம்பரிய உணவான முளைகட்டிய சத்து மாவு தான் எங்களது நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாகும் உணவாகும். நமது பாரம்பரிய தானியங்களை முளைகட்டி வறுத்து அரைத்து அதனை கஞ்சியாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது எல்லா தானியங்களிலும் உள்ள சத்துக்கள் அனைத்தும்…Read More
ஆரோக்கியமான கீரை இட்லி
Keerai Idly: குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு கொடுப்பதற்குள் அம்மாக்களுக்கு இரண்டு முறை பசித்து விடும். ஆரோக்கியமான உணவினை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பெற்றோர்கள் அந்த அளவிற்கு பாடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். ஏனென்றால் இந்த காலத்து குழந்தைகள் காய்கறிகள் என்றாலே பத்து எட்டு தள்ளி ஓடி விடுவர். பழங்களை கூட ஜூஸாக பிழிந்து சுவையாக கொடுத்தால் மட்டுமே சாப்பிடுகின்றனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக கீரை என்ற வார்த்தையை சொன்னாலே அலறியடித்து எகிறி குதித்து ஓடி…Read More
ஆரோக்கியமான கோதுமை களி
godhumai kali recipe in Tamil: அரிசி தயாரிப்பதற்கு தேவையான நெல் பயிரிடப்படுவதற்கு தமிழ்நாட்டில் உள்ள சில நஞ்சை நிலங்களே விளைச்சலை கொடுத்த நிலையில் சிறுதானியங்கள் தான் பெரும்பாலான கரிசல் காடுகளில் பயிரிடப்பட்டன. அப்படிப்பட்ட சிறு தானியங்களை வைத்து பெரும்பாலும் நம் முன்னோர்கள் களி என்ற உணவு வகை தான் செய்து சாப்பிடுவர். இன்றும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒரு நாளில் உளுந்தங்களி,வெந்தயக்களி, கம்புகளி,கேப்பைகளி போன்றவற்றை மறக்காமல் சாப்பிடும் பழக்கம் உண்டு. அப்படி செய்யும் களியில் உடலுக்கு…Read More
குழந்தைகளுக்கான வாழைப்பழ கோதுமை கஞ்சி
Banana Wheat kanji for 7 months baby: குழந்தைகளுக்கு முதல் முதலாக உணவு கொடுப்பது என்பது அம்மாக்களுக்கு மிகவும் பிடித்தமான மற்றும் சவாலான விஷயமாகும். ஏனென்றால் அதுவரை உணவின் சுவையை அறியாத குழந்தைகள் நீங்கள் முதன்முதலாக உணவினை கொடுக்கும் பொழுது மிகவும் ஆர்வமுடன் உணவினை வாங்கி நாக்கினை சப்பி சப்பி சாப்பிடும் அழகை பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதற்காகவே குழந்தைகளுக்கு எப்படி எல்லாம் உணவு ஊட்ட வேண்டும், என்னென்னவெல்லாம் ஆரோக்கியமாக செய்து ஊட்ட வேண்டும்…Read More