Kidney Beans Rice for Kids: குழந்தைகளுக்கு ஆறு மாதம் கடந்த உடன் ஒவ்வொரு முறை திட உணவு கொடுக்கும் பொழுதும், சத்தான உணவுகளை பார்த்து பார்த்து கொடுக்க வேண்டும் என்று நாம் விரும்புவோம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இன்னும் சொல்லப்போனால் கடைகளில் வாங்கி கொடுக்கும் உணவுகளை கொடுக்காமல், வீட்டிலேயே காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்து சத்தான உணவினை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெருமளவு அம்மாக்களிடம் வந்துவிட்டது.
பெருகிவரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மற்றொரு சாதனை, ஆரோக்கியத்தை பற்றி சாமானிய மக்களுக்கும் புரிய வைத்தது தான். இன்று எந்தெந்த உணவுகளில் இயற்கையாகவே உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய காரணிகள் நிறைந்துள்ளன மற்றும் எந்தெந்த உணவுகளில் செயற்கையான ரசாயனங்கள் கலந்து உள்ளன என்ற விழிப்புணர்வு நம்மில் அதிகம் வந்து விட்டது.
எனவேதான் நாங்கள் தயாரித்துக் கொடுக்கும் பொருட்களிலும் கூட பாரம்பரிய தானியங்களை பயன்படுத்தி, ரிசர்வேட்டிவ்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் போன்ற எதையும் சேர்க்காமல் பிரஷ்ஷாக தயாரித்து கொடுப்பதை தாரக மந்திரமாக வைத்துள்ளோம்.
இந்த தாரக மந்திரமே இலட்சக்கணக்கான அம்மாக்கள் எங்களிடம் வைத்துள்ள நம்பிக்கைக்கு காரணம். அது மட்டும் அல்லாமல், ஒவ்வொரு முறை குழந்தைகளுக்கான ரெசிபிகளை நான் தயாரித்து உங்களுக்கு கூறும்பொழுதும், ஆரோக்கியமாகவே கொடுக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து செய்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
ஆறு மாதம் காலம் முடிந்தவுடன் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய பருப்பு சாதம், தயிர் சாதம், பழங்களின் மசியல்கள், காய்கறி மசியல்கள் போன்ற பல வகையான உணவு வகைகளை நாம் பார்த்து விட்டோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி எட்டு மாதத்திற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய ஒரு சாத வகை தான்.
சிவப்பு பீன்ஸ் என்று சொல்லப்படும் கிட்னி பீன்ஸை நாம் அனைவரும் அறிவோம். சிறுநீரக வடிவில் இருக்கும் இந்த பீன்ஸ் எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியது. எனவே இந்த பீன்ஸினை வைத்து குழந்தைகளுக்கு எப்படி பீன்ஸ் சாதம் செய்து கொடுக்கலாம் என்பதை நாம் பார்க்கலாம்.
Kidney Beans Rice for Kids:
Kidney Beans Rice for Kids:
கிட்னி பீன்ஸின் நன்மைகள்
- கிட்னி பீன்ஸ் எனப்படுவது புரோட்டின்களின் புதையல் ஆகும். எனவே உடலின் தசை வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலங்களை அளித்து, எலும்புகள் மற்றும் தசைகளை வலுவடையச் செய்கின்றது.
- உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் இதில் அதிகம். எனவே குழந்தைகளின் உடலில் உணவினை எளிதில் செரிமானமடைய செய்கின்றது. எனவே மலச்சிக்கல் பிரச்சனையும் குழந்தைகளுக்கு அண்டாது. மேலும் நார் சத்துக்கள் ஆனது உடலில் சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும் தன்மை உடையது. எனவே நார்ச்சத்துக்கள் ஆனது குழந்தைகளின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஒன்றாகும்.
- அது மட்டுமல்லாமல் ராஜ்மா பீன்ஸில் இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இரும்புச்சசத்துக்களானது உடலில் சிவப்பணுக்களின் உற்பத்திக்கு மிகவும் அவசியமாகும். எனவே ரத்த சோகை வராமல் தடுக்கும் தன்மை இதற்கு உண்டு. மெக்னீசியம் தசைகள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றது மற்றும் பொட்டாசியம் இதயம் சீராக செயல்பட பெரிதும் உதவுகின்றது.
- காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் எனப்படும் சத்துக்கள் இதில் அதிகம் என்பதால் குழந்தைக்கு தேவையான எனர்ஜியை அளிக்கவல்லது. எனவே, குழந்தைகள் நாள் முழுவதும் ஆற்றலுடன் இயங்குவதற்கு தேவையான சத்துக்கள் இதில் உள்ளன.
- இதில் அதிக அளவு வைட்டமின்களும், மினரல்ஸ்களும் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தினை அளிக்கும் உணவாகும்.
- குறிப்பிட்டுச் சொல்லப் போனால் வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் போலேட் போன்றவை நிறைந்துள்ளன.
- ராஜ்மா பீன்ஸில் கொழுப்புச்சத்து குறைவு. எனவே உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதை தடுக்கின்றது.
Kidney Beans Rice for Kids:
- ஊறவைத்த கிட்னி பீன்ஸ்- 1/4 கப்
- அரிசி- 1/4 கப்
- பாசிப்பருப்பு -1/4 கப்
- நெய்- 1 டே.ஸ்பூன்
- பூண்டு- 1 பல்
- சீரகம் – இம்மியளவு
- மஞ்சள்தூள்- இம்மியளவு
- பெருங்காயம்- இம்மியளவு
Kidney Beans Rice for Kids:
செய்முறை
1.குக்கரை சூடாக்கி, அதில் நெய் ஊற்றவும்.
2.கொடுக்கப்பட்ட எல்லாவற்றையும் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும்.
3.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று விசில் வரும் அளவிற்கு மிதமான தீயில் வேக வைக்கவும்.
4.குக்கரில் விசில் இறங்கியதும் சாதத்தினை நன்றாக மசிக்கவும்
5.குழந்தைகளுக்கான சத்தான சாதம் ரெடி.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை அறிய 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Kidney Beans Rice for Kids:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சிவப்பு பீன்ஸ் சாதத்தினை குழந்தைகளுக்கு எந்த மாதத்தில் இருந்து கொடுக்க ஆரம்பிக்கலாம்?
இந்த சாதத்தினை குழந்தைகளுக்கு எட்டு மாதத்தில் இருந்து நீங்கள் கொடுக்க ஆரம்பிக்கலாம். பருப்பினை கொடுக்கும் பொழுது நன்றாக மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
இந்த பருப்பினை கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏதேனும் அலர்ஜி ஏற்படுமா?
பொதுவாக இந்த பருப்பினை கொடுக்கும் பொழுது அலர்ஜி ஏற்படாது. ஆனால் முதன்முதலாக கொடுக்கும்பொழுது சிறிதளவு பருப்பு கொடுத்து முதலில் சோதித்துவிட்டு பின்பு நன்கு கொடுக்க ஆரம்பிக்கலாம்.
பருப்பினை தனியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
ஆம். நீங்கள் சுண்டல் செய்வது போல, நன்றாக வேக வைத்து குழந்தைகளுக்கு மசித்து கொடுக்கும் பொழுது, குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்ஸ் ஆகியவை அதிகம் கிடைக்கும்.
Leave a Reply