Carrot puree for 8 Months Babies:குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிவடைந்த உடன் கொடுப்பதற்காக ஆரோக்கியமான பல்வேறு ரெசிபிகளை நாம் இதுவரை பார்த்திருப்போம். காய்கறி கூழ்,பழ கூழ்,அரிசி சாதம் ,பருப்பு சாதம் போன்ற பலவகை சாத வகைகளை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி 8 மாத குழந்தைகளுக்கான சத்தான கேரட் கீரை மசியல். பொதுவாகவே கேரட் மற்றும் கீரை இரண்டுமே பல்வேறு சத்துக்கள் உள்ளடக்கியது என்பது நாம் அனைவரும் அறிந்ததே….Read More
உருளைக்கிழங்கு ஆம்லெட்
Potato Egg Omelette: குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு,பான்கேக் மற்றும் முட்டை என்றாலே அலாதி பிரியம் தான். இவற்றை எல்லாம் சேர்த்து ஒரே ரெசிபியில் செய்தால் குழந்தைகளுக்கு பிடிக்காமலா போகும். அதற்கேற்ற ரெசிபி தான் இந்த உருளைக்கிழங்கு முட்டை பான்கேக். குழந்தைகளுக்கு எளிதாக கொடுக்கக் கூடிய ஆரோக்கியமான காலை உணவாக இது இருக்கும். மேலும் குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் அனைத்து சுவையும் கலந்திருப்பதால் குழந்தைகள் கட்டாயம் இதனை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். Potato Egg Omelette: உருளைக்கிழங்கு மற்றும்…Read More
ராகி ரவா உப்புமா
Rava Upma Recipe Tamil: குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் இட்லி,தோசை தவிர்த்து ஆரோக்கியமாக வேறு என்ன சிற்றுண்டி கொடுக்கலாம் என்றும் யோசிக்கும் அம்மாவாக நீங்கள் இருந்தால் இந்த ராகி ரவா உப்புமா சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவாக அமையும். சிறுதானியங்கள் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க வல்லது என்று நாம் அனைவரும் உணர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே சிறுதானியம் சேர்ந்த உணவுகளை கொடுப்பது அவர்களின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்….Read More
சாமை அரிசி பொங்கல்
Samai Pongal in Tamil: சிறுதானியங்களைப் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வரும் ஒன்று. மருத்துவர்களும் அதனையே பரிந்துரைப்பதால் தற்பொழுது சிறுதானியங்களை வைத்து விதவிதமாக என்னென்ன உணவுகள் சமைக்கலாம் என்று இணையதளத்தில் தேடுபவர்கள் நம்மில் ஏராளம். உண்மையில் அவை அரிசி மற்றும் கோதுமையை காட்டிலும் நார்ச்சத்துக்களை பலமடங்கு கொண்டிருப்பதால் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடியது. மேலும் நார்ச்சத்துக்கள் மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான வைட்டமின்கள்,மினரல்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் இதில் அதிகம் தான். சிறுதானியங்கள் எனப்படும் நாம்…Read More
சேப்பங்கிழங்கு வறுவல்
Senai kilangu varuval: குழந்தைகளுக்கான ஹெல்தியான பிங்கர் ஃபுட்ஸ் ரெசிபிதான் இந்த சேப்பக்கிழங்கு ஃபிரை. குழந்தைகளுக்கு ஃபிரை என்றாலே அலாதி பிரியம் தான்.லன்ச் பாக்சில் பெரும்பாலான குழந்தைகள் கேட்டு நச்சரிப்பது உருளைகிழங்கு ஃபிரை தான்.ஆனால் அடிக்கடி உருளைக்கிழங்கு ஃபிரை சாப்பிட்டு போரடித்த குழந்தைகளுக்கு உற்சாகமளிக்கும் ரெசிபிதான் இந்த சேப்பக்கிழங்கு ஃபிரை. இந்த கிழங்கானது சேப்பங்கிழங்கு, சோம்பு, சேனை, சாமைக்கிழங்கு, சேமங்கிழங்கு, சேமைக்கிழங்கு போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இந்த சத்துள்ள சேப்பக்கிழங்கு ஃபிரையினை 8 மாதத்திற்கு மேலே…Read More
குழந்தைகளுக்கான 3 வகையான சுரைக்காய் ரெசிபிகள்(Sorakkai Recipes)
Sorakkai Recipes:கோடைக்காலத்தில் குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள அவர்களுக்கு அதிக அளவு தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால், அதே அளவிற்கு குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் உணவிலும் கவனம் வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள்,பழங்கள் போன்றவற்றை நாம் கொடுக்க வேண்டும். தண்ணீர் சத்துள்ள பழங்கள் என்றாலே தர்பூசணி,வெள்ளரிக்காய் ஆகியவை நம் நினைவிற்கு வரும்.காய்கறிகளை பொறுத்தவரை சுரைக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகள் கொடுப்பது…Read More
குழந்தைகளுக்கான சீரக தண்ணீர் நன்மைகள்
குழந்தைகளுக்கான சீரக தண்ணீர் நன்மைகள்: குழந்தைகளுக்கு கிரைப் வாட்டர் போன்றவை கொடுப்பதற்கு முன்பாகவே நம் முன்னோர்கள் செரிமானத்திற்காக பயன்படுத்தியது சீரகத் தண்ணீர் தான். அதன் பின்னரே குழந்தைகளுக்கு கிரைப் வாட்டர் கொடுக்கும் பழக்கம் நம்மிடையே வந்தது. ஆனால் தற்பொழுது அவை எல்லாம் பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர். குழந்தைகளுக்கு இயற்கையிலேயே செரிமானத்திற்கான வரப்பிரசாதம் இருக்கும் பொழுது நாம் செயற்கையான வழியினை தேர்ந்தெடுப்பது அனாவசியம் தானே. குழந்தைகளுக்கான சீரக தண்ணீர் நன்மைகள் நம் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல்…Read More
குழந்தைகளுக்கான காலிபிளவர் பன்னீர் மசியல்
Cauliflower Paneer Puree in Tamil:எட்டு மாத குழந்தைகளுக்கான புரதச்சத்து நிறைந்த காலிபிளவர் பன்னீர் மசியல். குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை பார்த்து பார்த்து கொடுத்திருப்போம். அதற்கு அடுத்த கட்டமாக குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் வகையில் ஆரோக்கியமான உணவுகளை நாம் கொடுப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக எட்டு மாத காலத்தில் பிறகு நாம் ஊட்டி வளர்த்த குழந்தைகளை அவர்களாகவே உணவின் மீது நாட்டம் கொண்டு உண்ண…Read More
குழந்தைகளுக்கான காலிபிளவர் மசியல்
cauliflower puree recipe: குழந்தைகளுக்கு காய்கறிகள் ஆரோக்கியமானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் அதனை குழந்தைகளுக்கு எப்படி அறிமுகப்படுத்துவது என்பதில் தான் அம்மாகளுக்கு சவால்கள் நிறைந்துள்ளன. அச்சிரமத்தை போக்குவதற்காகவே காய்கறிகளை வைத்து தயாரிக்கக்கூடிய விதவிதமான ரெசிபிக்களை நான் உங்களுக்கு பரிந்துரைத்து கொண்டே இருக்கிறேன். அந்த வரிசையில் இன்று நாம் பார்க்க இருப்பது சற்றே வித்தியாசமான ரெசிபி. பொதுவாக காலிஃப்ளவர் ஃப்ரை என்றால் போதும் குழந்தைகள் துள்ளிக் குதித்து வந்து முதலில் சாப்பிட்டுவர். அதனால் வளர்ந்த குழந்தைகளுக்கு…Read More