ragi buttermilk benefits: வெயில் காலத்தில் சூட்டின் கோரத்தாண்டவம் இப்பொழுதே ஆரம்பித்து விட்டது. இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு தண்ணீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. கோடைகாலத்தில் பொதுவாக தண்ணீர் சத்துள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை குடிக்க கொடுப்பதோடு சேர்த்து தண்ணீரையும் அதிகம் கொடுக்க வேண்டும். தண்ணீரோடு மட்டுமல்லாமல் மோர் போன்ற நீராகாரங்களையும் கொடுப்பது குழந்தைகளில் உடல் நலனுக்கு நல்லது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் ரெசிபி கோடை காலத்திற்கு ஏற்ற…Read More
குழந்தைகளுக்கான முளைகட்டிய ராகி மில்க் ஷேக்[Ragi Recipe in Tamil]
Ragi Recipe in Tamil :வெயில் காலம் வந்து விட்டாலே சூட்டை தணிப்பதற்கு நம் முன்னோர்கள் பெரும்பாலும் அருந்தியது கேப்பைக்கூழ்,கம்பங்கூழ் மற்றும் பழைய சோறு போன்றவைதான். ஆனால் பெருகி வரும் நவநாகரீக காலத்தில் கூழ் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல்தான் நம்மில்பலரும் இருக்கின்றோம்.ஆனால் நம் வருங்கால சந்ததியினருக்கு பழங்கால உணவின் அருமைகளை எடுத்துரைக்கவேண்டியது நம்கடமை. வெயில் காலம் வந்தவுடனே நாம் அருந்தும் கூல்ட்ரின்க்ஸ் மற்றும் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட பானங்களில் பெரும்பாலும் இருப்பவை ரசாயனம்தான். அவற்றை தவிர்த்து…Read More
குழந்தைகளுக்கான ராகி பால்
Ragi Paal for babies in Tamil:தாய்ப்பாலுக்கு இணையான சத்துள்ள இந்த ராகி பாலினை குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முதல் கொடுக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் வாரி வழங்குவதில் கேழ்வரகிற்கு முக்கிய இடமுண்டு.உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களை அபரிமிதமாக தன்னுள் உள்ளடக்கியது கேழ்வரகு. இத்தனை சத்துக்கள் நிறைந்த கேழ்வரகினை பொடி செய்து அதனை கஞ்சியாக காய்த்து குழந்தைகளுக்கு கொடுத்திருப்போம்.ஆனால் கஞ்சியாக கொடுப்பதற்கு முன்பு பாலாக…Read More
கோடைக்கேற்ற ராகி மோர்
Ragi Mor Drink for Babies:கோடைகாலத்தில் பொதுவாக உடலினை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வித விதமான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் அருந்துவது வழக்கம். கோடைகாலத்தில் உடலினை குளிர்ச்சியாக வைத்து கொள்ள நம் முன்னோர்கள் கேப்பைக்கூழ் மற்றும் கம்மங்கூழ் அருந்துவது வழக்கம். ஆனால் நம் குழந்தைகளை சாப்பிட வைப்பதற்குள் பெரும்பாடாகிவிடும். ஆனால் இந்த சுவையான ராகி மோரினை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பர். இதை செய்வதும் மிக எளிது. எல்லாவற்றிற்கும் மேலாக வளரும் குழந்தைகளுக்கு தேவையான எண்ணற்ற…Read More
ராகி வாழைப்பழ அல்வா
Kulanthaikalukkana Ragi Vazhaipala Alva: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இனிப்பு என்றால் அலாதி பிரியம்.நாம் நினைத்தால் வித விதமான இனிப்பு வகைகளைசாப்பிட முடியும்.ஆனால் குழந்தைகளுக்கு அப்படியல்ல.ஒரு வயதிற்கு முன்னால் பால்,சர்க்கரை முதலிய கண்டிப்பாக சேர்க்க கூடாது.ஆனால் இவை எல்லாம் இல்லாமல் இனிப்புகள் சாத்தியமில்லை என்று எண்ணுகிறீர்கள் அப்படித்தானே? அப்படியென்றால் அதற்கான தீர்வுதான் இந்த ராகி வாழைப்பழ அல்வா.8 மாதத்திற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கான ஸ்பெஷல் இனிப்பு ரெசிபிதான் இந்த ராகி வாழைப்பழ அல்வா.சர்க்கரைக்கு பதிலாக…Read More
உளுந்து ராகி கஞ்சி
Ulundhu Ragi Kanji: பழங்காலம் முதலே தானியங்களுக்கு நம் உணவு பட்டியலில் நீங்க இடம் உண்டு.துரித உணவுகள் வருவதற்கு முன்னால் உடலுக்கு வலு சேர்க்கும் தானியங்களையே நம் முன்னோர்கள் முழு நேர உணவாக உட்கொண்டனர். குழந்தைகளுக்கும் தானிய உணவினையே முதல் உணவாக அறிமுகபடுத்தினர்.அவற்றுள் முதலிடம் வகிப்பது ராகி மற்றும் உளுந்து.இதனை கஞ்சியாக செய்து குழந்தைங்களுக்கு கொடுக்கும் பொழுது உடல் வலுப்பெறும். உளுந்து மற்றும் ராகி கலந்த மாவினை அரைத்து தயாராக வைத்து கொண்டு தேவையான பொழுது கஞ்சி…Read More
குழந்தையின் நலன் காக்கும் ராகி வாழைப்பழ புட்டு
ராகி வாழைப்பழ புட்டு எப்படி செய்வது? ஆறு மாத குழந்தைக்குகூட கொடுக்க கூடிய உணவு, கேழ்வரகு. குழந்தைகளின் முதல் உணவாக ராகி (கேழ்வரகு) இருப்பதால் ராகி மாவால் பலவித உணவுகளைச் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆவியில் வேகவைத்த உணவு மிக சிறந்தது. அதுவும் ராகி மாவை வேகவைத்து செய்யப்பட்ட ரெசிப்பி ‘தி பெஸ்ட்’ உணவு என்றுகூட சொல்லலாம். அவ்வளவும் ஆரோக்கியம். இந்த ராகியை சூப்பர் ஃபுட் என்றும் சொல்வார்கள். குழந்தைகளின் மிகச்சிறந்த உணவுப் பட்டியலில் ராகியும்…Read More
இன்ஸ்டன்ட் கேழ்வரகு கஞ்சி மிக்ஸ்
இன்ஸ்டன்ட் கேழ்வரகு கஞ்சி மிக்ஸ் ரெசிபி குழந்தைக்கு ஊட்டம் தரும் உணவுகளைக் கொடுப்பது நல்லது. அதில் மிகவும் சத்துள்ள உணவு கேழ்வரகு. இந்த கேழ்வரகை, கஞ்சியாக கொடுத்தால் குழந்தைக்கு ஏற்றதாக இருக்கும். இதை இன்ஸ்டன்ட் மிக்ஸாக நாம் ரெடி செய்து வைத்துக்கொண்டால் இன்னும் சுலபமாக இருக்கும். மேலும் நீங்கள் பயணம் செய்யும் காலங்களில் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்ற உணவாக இது அமையும். வீட்டிலேயே இன்ஸ்டன்ட்கேழ்வரகு கஞ்சி மிக்ஸ் செய்வது எப்படி? தேவையானவை : வறுத்த கேழ்வரகு பொடி…Read More
கேழ்வரகு கஞ்சி
(குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை : வீட்டில் தயார் செய்த கேழ்வரகு மாவு – ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் – தேவைக்கேற்ப செய்முறை : தண்ணீருடன் கேழ்வரகு மாவை சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும். இதனை குறைந்த தீயில் வைத்து சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் வரை நன்றாக கிளறவும். தெரிந்து கொள்ள வேண்டியது : வீட்டில் தயாரிக்கும் கேழ்வரகு மாவு குழந்தைக்கு ஏற்றது. இதில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம்…Read More