6 Months Baby Food in Tamil: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்கச்செய்வது பூசணி ஓட்ஸ் கஞ்சி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பெரியவர்களின் உடல் எடையை குறைப்பதற்கு வெகுவாக பயன்படும் அதே உணவுப் பொருள் குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச்செய்கின்றதென்றால் ஆச்சரியமாக உள்ளதல்லவா? அதுதான் ஓட்ஸ்.
ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் சிறிதளவு உட்கொண்டாலே உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து பசி எடுக்காமல் பார்த்துக்கொள்ளும்.எனவே உடல் எடையை குறைப்பதற்கு இது பிரதான உணவுப்பொருளாக உள்ளது.அதே சமயம் இதில் உள்ள வைட்டமின்கள், மினரல்ஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச் செய்யும்.
மேலும் ஓட்ஸுடன் எந்த வகையான காய்கறி மற்றும் பழங்களை சேர்த்தாலும் தனிச்சுவை அளிக்கும். எனவே குழந்தைகளுக்கு இதனை 6 மாதத்தில் இருந்தே கொடுக்கலாம். நான் இங்கு ஓட்ஸுடன் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூசணிக்காய் சேர்த்துள்ளேன். இது குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமளிக்கக் கூடியது.
குழந்தைகளுக்கான பூசணி ஓட்ஸ் மசியல்
6 Months Baby Food in Tamil:
- ஓட்ஸ் தூள் (மை லிட்டில் மொப்பெட் ஆர்கானிக் ஓட்ஸ் அல்லது நேச்சுரல் ஓட்ஸ்)- ½ கப்
- பூசணிக்காய் கூழ்-2 டே.ஸ்பூன்
- நெய்- 1 டீ.ஸ்பூன்
- இலவங்கப்பட்டை தூள் – 1/4 டீ.ஸ்பூன்.
6 Months Baby Food in Tamil:
செய்முறை
1.பூசணிக்காயின் தோலை நீக்கி அதில் உள்ள கொட்டைகளை நீக்கவும்.
2.சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
3.பூசணிக்காயை ஒரு கிண்ணத்தில் போட்டு குக்கரில் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
4. 2 முதல் 3 விசில் வரும் வரை காத்திருக்கவும்.
5.நன்றாக மசிக்கவும்.
6.பாத்திரத்தை சூடாக்கி நெய் ஊற்றவும்.
7.ஓட்ஸ் தூள் சேர்த்து வறுக்கவும்.
8.தேவையானளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
9.ஓட்ஸ் கூழ் ரெடி.
10.இதனுடன் பூசணிக்காய் கூழினை சேர்த்து நன்கு கிளறவும்.
11.இம்மியளவு லவங்கப்பட்டைத்தூள் சேர்த்து குழந்தைகளுக்கு இதமாக பரிமாறவும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply