குழந்தையின் உணவில் ருசியை கூட்டுங்கள்… Masala for babies- குழந்தைகளின் உணவில் மசாலா பொருட்களை சேர்க்க வேண்டுமா? என்பது குறித்து நான் எழுதுவேன் என நிச்சயம் நினைக்கவே இல்லை. என் மகன் சாப்பிடும் உணவில் நான் எந்த வித மசாலா பொருட்களையும் நான் சேர்த்தது இல்லை. காரணம் உணவில் மசாலா சேர்த்து சாப்பிட என் மகன் விரும்பாத காரணத்தால் நானும் அவனுக்கான உணவில் மசாலா பொருட்களை சேர்க்கவே இல்லை. ஆனால் என் மகளின் விருப்பம் வேறு விதமாக…Read More
Archives for 2017
கேரட் கூழ்
வயது-குழந்தையின் 5வது மாதத்தில் இருந்து தரலாம் தேவையானவை: கேரட் – ஒன்று(நடுத்தர அளவிலானது) செய்முறை: கேரட்டை முதலில் நன்கு கழுவி அதனை தோல் சீவிக் கொள்ளவும். பின் இதனை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். நறுக்கிய கேரட் துண்டுகளை ஒரு சின்ன கிண்ணத்தில் வைத்து தண்ணீர் நிரப்பிய பிரஷர் குக்கரில் வைத்து 2 விசில் வரை விடவும். அடுப்பை அணைத்து நன்றாக ஆறிய பிறகு கைகளால் மசிக்கவும் அல்லது அரைத்துக் கொள்ளவும். சுவைக்காக…Read More
என் குழந்தைக்கு உலர் தானியங்களை தரலாமா?
பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்படும் சந்தேகமாக இருப்பது குழந்தைக்கு திட உணவை கொடுக்கும் போது என்னவெல்லாம் கொடுக்கலாம் என யோசிப்பார்கள். ஆனால் குழந்தையின் செரிமான சக்தி என்பது குறைவாக இருக்கும் என்பதால் எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை கொடுப்பது சிறந்தது. எந்த வயதில் என்ன உணவு கொடுக்கலாம்? என்ன தரக் கூடாது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பார்கள். அதில் முதன்மையான சந்தேகமாக இருப்பது குழந்தைக்கு உலர் தானியங்களை தரலாமா என்பது தான்.. குழந்தையின் ஆரோக்யத்திற்கு உலர் தானியங்கள் ஏற்றது என்பது…Read More
சம்பா கோதுமை கஞ்சி பொடி
ஏலக்காய் சேர்த்த சம்பா கோதுமை கஞ்சி பொடி ரெசிபி நீங்கள் தினமும் கேழ்வரகு கஞ்சியை உங்கள் குழந்தைக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் போது அது நிச்சயம் தன் முகத்தை திருப்பிக் கொள்வதை பார்த்திருப்பீர்கள். நீங்கள் தினமும் ஒரே வகையான உணவை கொடுத்துக் கொண்டிருந்தால் அது நிச்சயம் உங்கள் குழந்தைக்கு போரடித்து விடும். இதற்கு தீர்வு வேண்டுமானால் உங்கள் குழந்தைக்கு புதுவிதமான ருசியில் கொடுத்துப் பாருங்கள். உங்கள் குழந்தை அதனை ருசித்து சாப்பிடும். அதை பார்த்தபிறகு நீங்களே புதுப்புது சுவையில்…Read More
திட உணவை கொடுக்கும் போது தேவைப்படும் 7 அத்தியாவசிய பொருட்கள்
குழந்தைகளுக்கு திட உணவை கொடுக்கும் போது ஆச்சரியம் எந்த அளவிற்கு இருக்குமோ அதே அளவிற்கு பயமும் நம்மிடம் இருக்கும். அதிலும் முதல் குழந்தையை பெற்றவர்களுக்கு உணவை கொடுப்பதற்கென சந்தைகளில் நிறையவே பொருட்கள் கிடைக்கிறது. உங்கள் குழப்பங்களை தவிர்த்து விடுங்கள். உங்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் என்ன என்பதை கண்டறிந்து அதில் முக்கியமான பொருட்களை மட்டும் இங்கே தந்துள்ளோம். இந்த பொருட்களை ஆன்லைனில் கூட நீங்கள் வாங்க முடியும். அலைந்து திரிந்து வாங்க வேண்டிய அவசியமில்லாமல் நீங்கள் இங்கே கிளிக்…Read More
பார்லி கஞ்சி
வயது-குழந்தையின் 5 வது மாதத்தில் இருந்து தரலாம் தேவையானவை: பார்லி – ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 2 கப் செய்முறை: பார்லியில் 2 கப் தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேக விடவும். இதன்பிறகு அதனை ஆறவைத்து மசித்துக் கொள்ளுங்கள். இதனை நன்றாக வடிகட்டி ஆறவைத்து பிறகு சிறிது வெந்நீர் சேர்த்து கொடுக்கவும். குழந்தை வளர்ந்த பிறகு இத்துடன் வெல்லம் அல்லது பனங்கல்கண்டு சேர்த்து தரலாம். தெரிந்து கொள்ள வேண்டியது : உமி நீக்காத…Read More
8வது மாத குழந்தைக்கான உணவு அட்டவணை
உங்கள் செல்லக்குழந்தை இப்போது எட்டாவது மாதத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் வேளையில் பல்வேறு புதிய சவால்களையும் நீங்கள் சந்திக்க வேண்டிய நேரமிது… உங்கள் குழந்தை தற்போது தவழ்ந்து கொண்டிருப்பதால் வெவ்வேறு புதிய விஷயங்களில் கவனம் செலுத்தும். அதனால் உணவின் மீதான நாட்டம் குறைந்து பொருட்களை தூக்கி எறிவது, ஸ்பூனால் ஊட்டும் உணவை நிராகரிப்பது என தொடர்ந்து கொண்டிருக்கும். 8வது மாதத்தில் குழந்தையால் யாருடைய உதவியும் இன்றி உட்கார முடியும் . மேலும் தங்கள் கைகள் மற்றும் கட்டைவிரலை கொண்டு…Read More
குழந்தைக்கு எப்போது திட உணவுகள் கொடுக்கலாம்?
திட உணவுகள் குழந்தைக்கு தரலாமா? பால் மட்டுமே குடித்துக் கொண்டிருந்த உங்கள் குழந்தையின் டயட்டில் சின்ன மாற்றம். திட உணவைக் குழந்தைக்குக் கொடுப்பதை நாம் வீனிங் (Weaning) என்கிறோம். இந்த வீனிங்கின் முதல் படி, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் குழந்தைக்கு அறிமுகப்படுத்துவது. அதாவது, திட உணவுகள் குழந்தைக்கு கொடுப்பது. குழந்தை, ஸ்பூனில் இருந்து எப்படிச் சாப்பிடுவது, எப்படி மென்று விழுங்குவது என முதல்முறையாக நீங்கள் குழந்தைக்குக் கற்றுத் தருகிறீர்கள். இந்த முறையால் குழந்தை வேறு சுவையை உணர்கிறது;…Read More
நேந்திரம் பழ பொடி
Nendram pala podi in Tamil நேந்திரம் பழ பொடி தென் இந்தியாவின் பிரபலமாக அறியப்படும் உணவு வகைகளில் ஒன்றாக இருக்கிறது வாழைப்பழம்… கேரளாவின் பாரம்பரிய உணவாக கருதப்படும் நேந்திரம் பழமானது அவர்களின் ஓண விருந்தில் தவறாமல் இடம் பிடித்திருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகளில் பிரதான இடம் பிடித்திருக்கும் இந்த காயை பொடியாக செய்து கஞ்சியாக காய்ச்சி குழந்தைக்கு கொடுக்கலாம்… சாதாரண பழங்களை நீங்கள் அப்படியே கொடுக்க முடியும். கேரளாவில் கிடைக்கும் விதவிதமான நேந்திரம் பழங்களை…Read More
உலர்தானிய பொடி
குழந்தைகளுக்கான ட்ரை ப்ரூட்ஸ் (அல்லது) உலர்தானிய பொடியை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? குழந்தைக்கு ட்ரை ப்ரூட்ஸ் பொடியை வீட்டில் தயாரிப்பது எப்படி என நானும் பல்வேறு சோதனைகளை செய்து பார்த்தேன். ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் சரியான முறையில் அமையவில்லை. பல்வேறு பொருட்களை சேர்த்து பார்த்தும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் தான் அதில் கொஞ்சம் ஜாதிக்காய் சேர்த்து தயாரித்த போது சுவையும் அதிகமாக இருந்ததுடன் நான் எதிர்பார்த்தபடியே அமைந்தது… குழந்தைகளின் உடல் எடையை அதிகரிப்பதுடன் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு…Read More